பிரபு சாலமனின் ‘செம்பி’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வியாழன், 2 ஜூன் 2022 (18:24 IST)
பிரபு சாலமனின் ‘செம்பி’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் குக் வித் கோமாளி அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘செம்பி’ 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிரைலரை பிரபல இயக்குனர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். ஜீவன் ஒளிப்பதிவில் புவன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் அஸ்வினுக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்