கோவை சரளாவா இது? அஸ்வின், பிரபுசாலமன் கூட்டணியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

வெள்ளி, 20 மே 2022 (10:42 IST)
பிரபு சாலமன் இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்து அவரை கடனாளி ஆக்கின. இந்நிலையில் அவரின் மகன் சஞ்சய்யை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்துக்கான ஆரம்பக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.


மேலும் மற்றொரு படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் அஸ்வினைக் கதாநாயகனாக்கி ஒரு புதிய படத்தை இயக்கி வந்தார். பிரபுசாலமனின் மற்ற படங்களைப் போல இந்த படமும் காடு சார்ந்த கதைக்களத்தைக் கொண்டதுதானாம். முழுக்க முழுக்க ஒரு பேருந்தில் நடக்கும் கதை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முழுப் படத்தையும் முடித்துள்ளனர்.

இதையடுத்து இன்று படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்துக்கு தலைப்பு ‘செம்பி’ என்று வைத்துள்ளனர். மேலும் கோவை சரளா வயதான பாட்டியாக தோன்றும் வித்தியாசமான போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. மற்றொரு போஸ்டரில் அஸ்வினும் ஒரு சிறுமியும் இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்