கிருத்திகா உதயநிதி இயக்கும் பேப்பர் ராக்கெட்… வெளியானது அடுத்த சிங்கிள் அப்டேட்!

திங்கள், 16 மே 2022 (16:30 IST)
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள பேப்பர் ராக்கெட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வணக்கம் சென்னை மற்றும் காளி ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இப்போது அவர் பேப்பர் ராக்கெட் என்ற நேரடி ஓடிடி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜி 5 தளத்தில் இந்த படம் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலை இன்று மாலை துல்கர் சல்மான் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்