ஆறாவது முறையாக இணையும் பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி!

vinoth

சனி, 23 மார்ச் 2024 (07:07 IST)
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. இவர்கள் கூட்டணியில் உருவான காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சாரக் கனவு உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மிகப்பெரிய கல்ட் கிளாசிக் பாடல்களாக இன்றளவும் கொண்டாடப்படுகின்றன. ஜெண்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடியிருந்தார்.

இருவரும் கடைசியாக 1999 ஆம் ஆண்டு வெளியான மின்சாரக் கனவு படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர். அதன் பிறகு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி இப்போது ஆறாவது முறையாக இணைய உள்ளது.

மனோஜ் என் எஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பிரபுதேவா நடிக்க ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் உள்ளிட்ட விஷயங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்