இயக்குனர் ராம், நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. மார்ச் மாதம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிலீஸ் தள்ளிப் போய் இதுவரை புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்த படத்துக்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கியுள்ள பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்தை இயக்குனர் ராம் தயாரிக்க, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பைனான்ஸ் செய்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தயாரான நிலையில் தற்போது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வானது.