இளையராஜா பயோபிக் படத்திற்கு திரைக்கதை எழுதும் கமல்?

Sinoj

வெள்ளி, 22 மார்ச் 2024 (22:16 IST)
இளையராஜா வாழ்க்கைப் படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் திரைக்கதை எழுதுவதாக தகவல் வெளியாகிறது. 
 
இந்திய சினிமாவின் பிரபல   இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இதுதவிர, சிம்பொனி, கீர்த்தனைகள், புத்தகங்கள்,பயணக் கட்டுரைகள் என பன்முக கலைஞரகாகவும் இருக்கிறார்.
 
ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ள இளைஞராஜாவின் வாழ்க்கைப் படம் உருவாகி வருகிறது.
 
இப்படத்தை மும்பையைச் சேர்ந்த பிரபல நிறுவனம் தயாரிக்கிறது. இளையராஜாவாக தனுஷ் நடிக்க, இளையராஜா இசையில், அருண்மாதேஸ்வரன்  இப்படத்தை இயக்குகிறார்.
 
சமீபத்தில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.அப்போது ரஜினி, கமல் உள்ளிட்டோட் கலந்துகொண்டனர்.  இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகி பேசு பொருளானது.
 
இந்த நிலையில், இப்படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் திரைக்கதை எழுதுவதாக தகவல் வெளியாகிறது. இளையராஜா பயோபிக்கில், கமல் திரைக்கதை எழுதுவதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் வைரமுத்து ஆகிய இருவரைப் பற்றி இப்படத்தில் கேரக்டர்கள் வருமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
அதேசமயம் இப்படத்திற்கு யார் திரைக்கதை எழுதினாலும் சிறந்த எழுத்தாளரான இளையராஜாவும் ஒருமுறை அதைப் பரிசீலனை செய்வார் எனக் கூறப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்