வில்லனாக நடிக்கும் பிரபுதேவா

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (18:28 IST)
ஹீரோவாக நடித்துவரும் பிரபுதேவா, ஒரு படத்தில் வில்லனாகவும் நடிக்க உள்ளாராம்.


 

 
கோலிவுட்டில் படம் இயக்கி, பாலிவுட்டிலும் படங்களை இயக்கிய பிரபுதேவா, ‘தேவி’ படத்தின் மூலம் மறுபடியும் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். தற்போது ஹன்சிகாவுடன் ‘குலேபகாவலி’, லட்சுமி மேனனுடன் ‘யங் மங் சங்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், ‘மெர்குரி’ என்ற படத்தில் வில்லனாக நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறாராம். ‘டிமான்டி காலனி’, ‘ஜில் ஜங் ஜக்’ படங்களில் நடித்த ஷனந்த் ரெட்டி, இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்