பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!

புதன், 29 செப்டம்பர் 2021 (10:58 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் சீனிவாசன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லத்திகா என்ற மொக்கை படத்தை ஒரு வருடத்துக்கும் மேல் சொந்த செலவில் ஓட்டி ஏகப்பட்ட பப்ளிசிட்டி செய்து சினிமா உலகினரை ‘யார்றா இவரு’ என வியக்க வைத்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். அதன் பின்னர் சந்தானத்தோடு நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் வெற்றியால் குறிப்பிடத்தகுந்த நகைச்சுவை நடிகராக உருவானார்.

ஆனாலும் செக் மோசடி வழக்கில் கைது என சில சர்ச்சைகளில் சிக்கி சிறை சென்று வந்தார். இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்