50 கோடி வசூலை எட்டிய போர் தொழில்.. வெற்றி விழா கொண்டாடிய படக்குழு!

சனி, 1 ஜூலை 2023 (07:29 IST)
நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். ஜூன் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைக் குவித்து நல்ல வசூலை ஈட்டியுள்ளது.

இந்த ஆண்டு வெளியான படங்களில் நல்ல வசூலை ஈட்டி வெற்றி பெற்ற திரைப்படங்களில் போர் தொழில் படமும் ஒன்று. இந்நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாட சக்ஸஸ் மீட் நிகழ்ச்சி ஒன்றை படக்குழுவினர் நடத்தினர்.

அந்த நிகழ்ச்சியில் படம் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே மிகப்பெரிய லாபத்தை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்