நான் அடிச்சு சொல்றேன் இந்த இளம் நடிகர் யாருன்னு உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது!

செவ்வாய், 26 மே 2020 (16:22 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் ஒருவர் faceapp செய்த வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இவரை அடையாளம் காண அனைவரும் படாத பாடுபட்டுவிட்டனர். ஆனால், வெகு சிலரால் மட்டுமே இவரை அடையாளம் காண முடிந்தது. அதுசரி, இவர் யார் என்று  உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? அப்படி முடிந்தால் நீங்கள் பெரிய பிஸ்தா தான்.  

இந்த நடிகர் வேறுயாருமில்லை  குட்டிப்புலி படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான பால சரவணன். அந்த படத்தை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், வேதாளம், ராஜா மந்திரி, டார்லிங், ஒருநாள் கூத்து, இருட்டு அறையில் முரட்டு குத்து, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்து அசத்தியிருக்கிறார்.

வாழ்தல் அழகு...

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்