“மொட்டை அடித்தது ஏன்?” – பூர்ணா விளக்கம்

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (20:57 IST)
தான் மொட்டை அடித்தது ஏன் என நடிகை பூர்ணா விளக்கம் அளித்துள்ளார்.


 
‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பூர்ணா, சிலபல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும், அவருக்கென பெரிதாக மார்க்கெட் இல்லை. தற்போது ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் ராம், மிஷ்கின் நடிக்கும் ‘சவரக்கத்தி’ மற்றும் சசிகுமார், மகிமா நம்பியார் நடிப்பில் முத்தையா இயக்கும் ‘கொடிவீரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில், ‘கொடிவீரன்’ படத்துக்காக மொட்டை அடித்துள்ளார் பூர்ணா. “என்னை அப்ரோச் செய்தபோதே, இந்த கேரக்டர் மொட்டை அடித்துக் கொள்ளும் என்றார்கள். அப்போது கொஞ்சம் தயங்கினேன். ‘கதையைக் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள்’ என்றார்கள். கதையைக் கேட்டபிறகு, என்னுடைய கேரக்டருக்காக மொட்டை அடித்துக் கொள்ளலாம் எனத் தோன்றியது” என்கிறார் பூர்ணா. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்