தமிழகத்தின் அக்.,மாத ஜிஎஸ்டி வருவாய் உயர்வு- மத்திய அமைச்சகம்

செவ்வாய், 1 நவம்பர் 2022 (18:43 IST)
தமிழகத்தில் நடப்பு ஆண்டின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரிவாய் 25% உயர்திருப்பதாக மத்திய  நிதி அமைச்சகம்  கூறியுள்ளது.

கடந்தாண்டு  நடந்த சட்டசபைத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

மக்களுக்கு பல்வேறு அறிவிப்புகள், திட்டங்களை இந்த அரசு அறிவித்து வரும் நிலையில்,கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் அக்டோபர் மாதத்தின் ஜிஎஸ்டி வருவாய் 25% உயர்ந்து ரூ.9540 கோடியாக அதிகரித்துள்ளதாக  மத்திய  நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளதாவது:

2022 ஆம் ஆண்டு, கடந்த ஏப்ரம் மாதத்தில் ரூ. 1,67,540 கோடி என்றும், இதற்கடுத்து, அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ.1,51,718 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Edited by Sinoj
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்