பொன்னியின் செல்வன்… எல்லா நடிகர்களையும் வைத்து மணிரத்னம் எடுக்கும் பாடல்!

வியாழன், 4 பிப்ரவரி 2021 (08:07 IST)
பொன்னியின் செல்வன் படத்துக்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில் மிகப் பிரம்மாண்டமான பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் நிலையில் இப்போது அனைத்து நடிகர்களையும் வைத்து மிகப் பிரம்மாண்டமாக பாடல் ஒன்றை எடுத்து வருகிறாராம் மணிரத்னம். பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் 30 சதவீதக் காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்