அநாகரிகமாக நடந்துகொண்ட போலீஸார் - பிரபல நடிகை டுவீட்

புதன், 25 மே 2022 (17:33 IST)
எந்த வாகனத்தில் வருகிறார்கள் என்பதை வைத்து, மக்களை போலிஸார் எடைபோடக் கூடாது என  பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகை, அர்ச்சனா கவி. இவர் நீலத்தாமரா,பெஸ்ட் ஆப் லக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 11 மணிக்கு நான் என் குடும்ப நண்பர் மற்றும் அவரது மகள்களுடன் மிலானாவில் இருந்து ஆட்டோவின் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது, கொச்சி துறைமுகப் போலீஸார் எங்களை நிறுத்தினர்.

அவர்கள் எங்களிடம் அ நாகரிகமாக நடந்துகொண்டனர்.  அதனால் நாங்கள் அப்போது பாதுகாப்பின்மையுடன் இருந்தோம். எந்த வாகத்தில் வருகிறோம் என்பதை வைத்து போலீஸார் மக்களை எடைபோடக் கூடாது.,அவர்கள் எங்களது சந்தேகம் அடைந்து எங்கள் வீட்டு வரை எங்களைப் பின் தொடர்ந்து வந்தனர்.

இது எங்களுக்கு மோசமாக அனுபவமாக இருந்தது.  இந்தப் பதிவை அவர் உயர்போலீஸ் அதிகாரிகளுக்கு டேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்