பெண் தயாரிப்பாளரை எட்டி உதைத்த சக ஆண் தயாரிப்பாளர்!!

Webdunia
புதன், 4 ஜனவரி 2017 (14:41 IST)
தன்னை வயிற்றில் எட்டி உதைத்தாக தயாரிப்பாளர் விஜய் பாபு மீது சக தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். 


 
 
கேரளாவை சேர்ந்த நண்பர்களான சான்ட்ரா தாமஸும், விஜய் பாபுவும் சேர்ந்து ஃபிரைடே பிலிம் ஹவுஸ் என்ற மலையாள பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், சான்ட்ராவுக்கு திருமணம் முடிந்த பிறகு தயாரிப்பு நிறுவனத்தை தனது கணவருடன் சேர்ந்து நடத்த சான்ட்ரா திட்டமிட்டார். எனவே நிறுவனத்தில் இருந்து விலகுமாறு அவர் விஜய் பாபுவை கேட்டார். 
 
கஷ்டப்பட்டு துவங்கி நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து விலக விஜய் பாபு மறுத்தார். இதனால் விஜய் பாபுவும், சான்ட்ராவும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. 
 
அப்போது விஜய் சான்ட்ராவை எட்டி உதைத்தாக கூறப்படுகிறது. விஜய் உதைத்ததில் காயம் அடைந்த சான்ட்ரா கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் விஜய் பாபு மீது போலீசில் புகார் அளித்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்