கடைசி நேரத்தில் திடீர் சிக்கல்: ரிலீஸாகவில்லை ‘பிளான் பண்ணி பண்ணனும்’!

வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (14:28 IST)
ரியோ நடித்த ’பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட திடீர் சிக்கல் காரணமாக இன்று அந்த படம் வெளியாகவில்லை என தகவல் வெளியாகி உள்ளது
 
ரியோ, ரம்யா நம்பீசன் நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும். இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே சிலமுறை அறிவிக்கப்பட்டு அதன்பின் காலதாமதம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் திடீரென காலை காட்சி மற்றும் மதிய காட்சி இடம்பெறவில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது
 
இந்த படத்தின் சில பைனான்ஸ் பிரச்சினை இருப்பதாகவும் அதன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒருவேளை மாலைக்குள் பிரச்சனை சரி செய்யப்பட்டால் இரவு காட்சி வழியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்