பிசாசு 2 படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த தகவல்!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (20:42 IST)
மிஸ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 2 கோடி பட்ஜெட்டில் உருவாகி 8 கோடி வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
உச்சந்தல ரேகையிலே என்று தொடங்கும் இந்த பாடல் ஒரு உறவின் பாடல் என்றும் கூறப்படுகிறது. கார்த்திக்ராஜா கம்போஸ் செய்துள்ள இந்த பாடல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் நான் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது 
 
ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்