’பிசாசு 2’ படத்தின் பட்ஜெட் எவ்வளவு? ஆச்சரிய தகவல்

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (18:01 IST)
’பிசாசு 2’ படத்தின் பட்ஜெட் எவ்வளவு? ஆச்சரிய தகவல்
மிஷ்கின் இயக்கத்தில் உருவாக உள்ள ’பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் மிஷ்கினின் பிறந்தநாளின்போது ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே 
 
அவருடைய பிறந்தநாளை கொண்டாடிய பிரபல இயக்குநர்கள் அவருடைய அடுத்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ’பிசாசு 2’ படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது பிசாசு படம் வெறும் 3 கோடி பட்ஜெட்டில் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது ’பிசாசு 2’படத்தின் பட்ஜெட் 11 கோடி என்று கூறப்படுகிறது 
 
குறிப்பாக ஆண்ட்ரியாவின் சம்பளம், மிஷ்கின் சம்பளம், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா சம்பளம் ஆகியவையே பட்ஜெட்டில் 25% உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் செலவு செய்யப் போவதாகவும் இதனால் இந்த பட்ஜெட்டில் இந்த படத்தின் பட்ஜெட் எகிறி விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் ’பிசாசு 2’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாலும், தற்போது ஓடிடி உள்ளிட்ட பல வியாபார அம்சங்கள் இருப்பதாலும் இந்த படத்தின் பட்ஜெட் 11 கோடி என்பது பெரிய விஷயம் இல்லை என்றும் பட தயாரிப்பாளர் கருதுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்