தமிழர்களை அவமதிப்பதற்கு சமம்: விஜய்சேதுபதிக்கு மலேசியா துணை முதல்வர் கண்டனம்

Webdunia
ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (17:08 IST)
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 800 என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என கிட்டத்தட்ட ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர், ராதிகா, சரத்குமார், குஷ்பு உள்பட ஒரு சிலர் மட்டும்தான் விஜய்சேதுபதிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது என உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பது குறித்து விரைவில் முடிவு எடுப்பார் என தெரிகிறது 
 
இந்த நிலையில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி என்பவர் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரன் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரராக இருக்கலாம். ஆனால் நல்ல மனிதராக அவர் தோல்வி அடைகிறார்
 
முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி ஏற்று நடிப்பது தமிழர்களை அவமதிப்பதற்கு சமம்’ என்று கூறியுள்ளார் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி அவர்களின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்