பேட்ட' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: ரசிகர்கள் கொண்டாட்டம்

செவ்வாய், 25 டிசம்பர் 2018 (20:01 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு 'யூஏ' சான்றிதழை சென்சார் அதிகாரிகள் கொடுத்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'பேட்ட' டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 1ஆம் தேதிதான் 'பேட்ட' டிரைலர் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் டிசம்பர் 28ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வீடியோவை புதிய சாதனை ஏற்படுத்த ரஜினி ரசிகர்கள் தற்போதே தயாராகிவிட்டனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்