திருமணம் செய்ய ஆசை! நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் ஓகே: காஜல் அகர்வால்

செவ்வாய், 25 டிசம்பர் 2018 (13:25 IST)
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.


தற்போது காதல் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சினிமா அனுபவங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அண்மையில் காஜல் அகர்வால் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனக்கு திருமணம் செய்து கொள்ள ஆசை இருக்கிறது. 
 
ஆனால் பொருத்தமான மாப்பிள்ளை இன்னும் கிடைக்கவில்லை. இதற்காகவே திருமணத்தை கொஞ்ச நாட்கள் தள்ளிப்போட்டு இருக்கிறேன். நல்ல மாப்பிள்ளை கிடைக்கும்போது உடனேயே எனது திருமணம் நடக்கும். அது காதல் திருமணமாகவும் இருக்கலாம். பெற்றோர்கள் நிச்சயம் செய்த திருமணமாகவும் இருக்கலாம். 
 
கதாநாயகியாக 50 படங்கள் தாண்டி விட்டேன். வெற்றி தோல்வி நம் கையில் இல்லை. ஒரு நிகழ்ச்சியில் என்னை ஒருவர் முத்தமிட்டது எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்துச்சு. ஆனால் அவர் மனதில் கெட்ட எண்ணம் இல்லை. அந்த சம்பவத்துக்கு பிறகு என்னிடம் மன்னிப்பு கேட்டார். அதோடு அந்த பிரச்சினையை விட்டு விட்டேன் என்றார் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்