20 நாட்களுக்கு பின் கொரோனாவில் இருந்து குணமான பிரபல நடிகர்!

Webdunia
சனி, 8 மே 2021 (16:41 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பவன் கல்யாண் 20 நாட்களுக்கு பின் தற்போது குணமாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
தெலுங்கு திரையுலகில் பவர்ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாண் ஏப்ரல் 16-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார் 
 
இந்த நிலையில் தற்போது அவர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டதாகவும் அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அவரது ஜனசேனா கட்சி அதிகாரபூர்வமாக பவன் கல்யாண் குணம் ஆகி விட்டதாகவும் அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் அறிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் ஆனாலும் இன்னும் சில நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்த வேண்டும் என்பதால் இப்போதைக்கு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்று பவன் கல்யாண் வட்டாரங்கள் கூறுகின்றன
 
இருப்பினும் பவன் கல்யான் குணமடைந்தது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்