தன் ஸ்டைலில் கமலுக்கு ஆறுதல் சொன்ன பார்த்திபன்!

Webdunia
திங்கள், 3 மே 2021 (08:31 IST)
நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நிலையில் 2000 வாக்குகளுக்குள்ளான வித்தியாசத்தில் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்துள்ளார்.

மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல் நேற்று காலை முதல் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெறுவது போல இருந்தது. ஆனால் கடைசி இரண்டு சுற்றுகளில் அவர் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 2000 வாக்குகளுக்குள்ளான வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அதையடுத்து அவருக்கு பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர். இந்த வகையில் நடிகர் பார்த்திபன் டிவிட்டரில் ‘திரு கமல் அவர்களின் வெற்றி என்பது.... வெற்றி தோல்வி-எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் க(ள்)ளம் அறிந்தப் பின்(னும்) வாங்காமல்,வெல்வதற்கு கூட்டு பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்