பசுபதியின் அடுத்த படத்தின் அறிவிப்பு: இயக்குனர் யார் தெரியுமா?

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (20:20 IST)
சமீபத்தில் வெளியான பா ரஞ்சித்தின் சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்தவர்களில் ஒருவர் பசுபதி என்பதும் அவர் ரங்கன் வாத்தியார் என்ற கேரக்டராகவே வாழ்ந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தில் அவருக்கு மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில் தற்போது மேலும் ஒரு படம் வாய்ப்பு கிடைத்துள்ளது. பசுபதி நடிக்கும் அடுத்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது
 
இந்த படத்தில் பசுபதி ரோகிணி அம்மு அபிராமி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை இயக்குனர் ராம் சங்கர் என்பவர் இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றதை அடுத்து இந்த பூஜையில் பசுபதி அம்மு அபிராமி ரோகினி மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்