கயல் ஆனந்திக்கு வந்த சோதனைய கேளுங்ளேன்....

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2017 (15:12 IST)
கயல் ஆனந்தி பசங்க படத்தில் நடித்த சிறுவர்களில் ஒருவரான பகோடா பாண்டிவுடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 
 
புதிய கீதை, ராமன் தேடிய சீதை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜகன்நாதன் என் ஆளோட செருப்ப காணோம் என்ற படத்தை இயக்க உள்ளார்.
 
கதையின் நாயகியாக நடிக்க கயல் ஆனந்தியிடம் பேசி சம்மதம் வாங்கப்பட்டது. அப்போது நாயகன் தேர்வாகாத நிலையில் உடனடியாக நடிக்க ஒப்பு கொண்டார் ஆனந்தி.
 
அதன் பின்னர் நாயகன் தேர்வு நடத்தியதில் பசங்க படத்தில் நடித்த பாண்டி தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில் நாயகன் பாண்டி என்று தெரிந்ததும் ஆனந்தி படத்திலிருந்து விலகுவதாக கூறினார்.
 
பின்னர் பாண்டியை வைத்து எடுத்த மாதிரி காட்சியை ஆனந்தியிடம் கான்பித்ததும் இந்தப் படத்தில் நடிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார். யாருக்கு தெரியும் உண்மையான காரணம்?
அடுத்த கட்டுரையில்