தம்பி சிலம்பரசன் மீண்டும் முத்திரை பதித்திருக்கின்றார்: சீமான் பாராட்டு!

செவ்வாய், 30 நவம்பர் 2021 (12:33 IST)
தம்பி சிலம்பரசன் மீண்டும் முத்திரை பதித்திருக்கிறார் என மாநாடு படத்தை பாராட்டி நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்
 
சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்திற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் இந்த படத்தை பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்
 
மாறுபட்ட திரைக்கதை ஓட்டமும் விறுவிறுப்பு குறையாத காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச் செய்து மிகவும் ரசிக்கும்படியாக திரைப்படத்தை நகர்த்தி செல்கிறது
 
எனது தம்பி சிலம்பரசன் தனது நடிப்பாற்றலால் வசன உச்சரிப்பிலும் மீண்டும் ஒருமுறை முத்திரை பதித்திருக்கிறார் என சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்