இந்த நிலையில் இது குறித்து பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: நான் சற்று உணர்ச்சி வசப்பட்டவன்தான்! என் கண்ணீர் மழைத்துளி போல் தூய்மையானது! நேற்று 'டீன்ஸ் திரையரங்குகளில் அலைமோதிய அன்பு கண்களை கடலாக்கியது. வெளியான முதல் நாள் கூட்டமேமேயில்லை, மறுநாள் டிக்கட்டே இல்லை. எத்தனை ஸ்க்ரீன்ஸ்? எவ்வளவு வசூல்? இன்று வரை நான் பார்க்கவேயில்லை. பார்க்கவும் போவதில்லை. போதும் இந்த ஆனந்தக் கண்ணீர்.