விஜய் படத்தை ‘அட்லி’ செய்த இயக்குனருக்கு ஆஸ்கார் விருதா?

திங்கள், 10 பிப்ரவரி 2020 (17:37 IST)
பல கொரிய மொழி திரைப்படங்கள் தமிழில் காப்பியடிக்கப்பட்டு தயாராவதாக நெட்டிசன்கள் கூறுவதுண்டு. ஆனால் இருபது வருடங்களுக்கு பின் விஜய் நடித்த தமிழ் படம் ஒன்றின் காப்பியை கொரிய மொழி இயக்குனர் ஒருவர் படமாக எடுத்து தற்போது ஆஸ்கார் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று அறிவிக்கப்பட்ட ஆஸ்கார் விருதுகளில் மூன்று விருதுகளை பெற்ற திரைப்படம் ’பாராசைட்’. இந்தப் படத்தின் கதை அப்படியே அச்சு அசலாக விஜய் நடித்த மின்சார கண்ணா என்ற படத்தின் கதை போல் உள்ளதாக நெட்டிசன்களும், விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்
 
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய், ரம்பா ஜோடியாக நடித்த இந்த படத்தில் குஷ்பு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தின் கதையும் ’பாராசைட்’ படத்தின் கதையும் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாமல் அப்படியே இருப்பதாக சமூகவலைதளங்களில் பதிவாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் படத்தை அட்லி செய்த இயக்குனருக்கு ஆஸ்கார் விருதா? என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்