பாண்டிராஜ் இயக்கத்தில் முதன்முறையாக இணையும் சூர்யா - கார்த்தி

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (10:29 IST)
திரைப்பட நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் சிவகுமாரின் மகன்கள் என்பது அனைவரும் அறுந்ததே. அண்ணன் சூர்யாவும் -  தம்பி கார்த்தியும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பார்களா என ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக புதிய செய்தி உலாவுகிறது.

 
அது என்னவென்று பார்த்தால், பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். அந்த படத்தை சூர்யா தனது  சொந்த நிறுவனமான 2டி என்டர்டெயிண்மண்ட் மூலம் தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும்  வெளியாகவில்லை.
அடுத்த கட்டுரையில்