கொரோனவால் வீட்டிலேயே கடைபோட்ட சித்ரா - பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய ப்ரோமோ

புதன், 29 ஜூலை 2020 (20:29 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்தது.

இதற்க்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பலரும் தொலைக்காட்சி தொடர்களை மிஸ் பண்ணியுள்ளார். அவர்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வித விதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கினாள் சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்ப்போது மீண்டும் துவங்கி புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் தற்ப்போது  பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலின் புதிய ப்ரோமோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆம், கொரோனா ஊரடங்கினாள் முல்லை வீட்டிலேயே கடை போட்டு வியாபாரம் செய்கிறார். காட்டு பயலே பாடல் இந்த ப்ரோமோவிற்கு தூக்கலான மசாலா தூவியது போல் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்