ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் சூர்யா: ஜெய்பீம் டிரைலர்!

வெள்ளி, 22 அக்டோபர் 2021 (18:16 IST)
சூர்யா நடிப்பில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெய்பீம் என்ற படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்திற்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் போராடும் சூர்யாவின் காட்சிகள் அந்த டிரைலரில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சுதந்திரம் பெற்று 50 வருடங்கள் ஆகியும் ஒரு அடையாள அட்டை கூட இல்லாமல் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் சூர்யாவின் போர் வெற்றி பெறுமா என்பது படத்தின் கிளைமாக்ஸில் தெரியும் 
 
தற்போது இந்த படத்தின் டிரைலர் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த ட்ரெய்லர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்