அதிர்ஷ்டத்தை நம்பவில்லை, உண்மையை நம்புறேன்: ஜெய்பீம் புதிய புரமோ

செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:48 IST)
சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் வரும் நவம்பர் 2ம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி விட்டது என்பதும் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் வசனக் காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளது
 
பழங்குடியினர் மற்றும் மனித உரிமை குறித்த வழக்கில் எளிதாக ஜெயித்து விடலாம் என்று நினைக்காதீர்கள், அதிர்ஷ்டம் எல்லா நேரமும் கை கொடுக்காது என்று வழக்கறிஞர் ஒருவர் கூற, அதற்கு சூர்யா ’நான் அதிர்ஷ்டத்தை நம்பவில்லை, உண்மையை நம்புறேன் என்று கூறுகிறார்
 
மேலும் இன்னொரு வசனமாக ’சட்டம் என்பது மிகவும் பவர்ஃபுல் ஆயுதம் யாரை காப்பாற்றுவதற்காக நாம் இதை பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம்’ என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்