ஹீரோ சொதப்பியதால் உஷாரான மித்ரன்… இந்த வாட்டி அதை அவர் பண்ணலையாம்!

புதன், 28 ஏப்ரல் 2021 (08:10 IST)
இயக்குனர் மித்ரன் கார்த்தியை வைத்து சர்தார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இரும்புத்திரை என்ற வெற்றிப்படத்தின் மூலம் அறிமுகமான மித்ரன் மீது மிகப்பெரிய அளவில் நம்பிக்கை இருந்தது. ஆனால் அதையடுத்து அவர் இயக்கிய ஹீரோ திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம் அந்த படத்தின் மோசமான கதை மற்றும் திரைக்கதைதான் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது கார்த்தியை வைத்து அவர் இயக்கும் படத்துக்கு கதையை அவர் மட்டும் எழுதவில்லையாம். மாஸ்டர் பட கதாசிரியர் பொன் பார்த்திபன் உள்ளிட்ட மூன்று பேரை சேர்த்துக்கொண்டு எழுதியுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்