தமிழ் திரையுலக நடிகைகளில் ஒருவரான ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதே நேரத்தில் அந்த பிரபலத்தை அவர் சினிமா வாய்ப்புகளாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் அவருக்கு அரிதாகவே சினிமா வாய்ப்பு கிடைத்தது
இந்த நிலையில் யோகி பாபு உடன் ஓவியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சட்ட முன் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு பூமர் அங்கிள் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஸ்வதீஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தர்மபிரகாஷ் என்பவர் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது