ஆனால் தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் படம் ரிலீஸாகததால் இந்த படத்தில் நிறைய முதலீடுகளை போட்டுள்ள போனி கபூருக்கு இப்போது பொருளாதார சிக்கல்கள் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையறிந்த ஓடிடி நிறுவனம் ஒன்று வலிமை படத்தை மிகப்பெரிய தொகைக்கு கேட்டுள்ளதாம். ஆனால் அஜித்தோ படம் திரையரங்கில்தான் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.