தேர்தல் அதிகாரிகளுக்கு கொரோனா; கூடுதல் அதிகாரிகள் நியமனம்! – தமிழக தேர்தல் அதிகாரி தகவல்!

வியாழன், 29 ஏப்ரல் 2021 (13:24 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகமாக உள்ள நிலையில் பல்வேறு கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளதாக சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதற்கு நடுவே மே 2 அன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள தேர்தல் அதிகாரிகள் பலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு “தேர்தல் அதிகாரிகள் பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணும் பணிகளில் கூடுதல் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 16,387 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மைக்ரோ அப்சர்வர் கண்காணிப்பாளர் இருப்பார். காய்ச்சல் அதிகமாக இருப்பது தெரிய வந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்