ஆஸ்கர் விருது ; ஜெய்பீம் படம் இடம்பெறவில்லை !

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (19:30 IST)
ஜெய்பீம் படம்  ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இருளர் பழங்குடி மக்கள் வாழ்க்கை குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்றது.

அதை தொடர்ந்து பல்வேறு திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வரும் ஜெய்பீம், சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வமுடம் எதிர்பார்த்த நிலையில், இன்று ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் சூர்யாவின் ஜெய்பீம் படம் இடம்பெறவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்