''ஒரு சினிமாவே ரிலீஸான தேதியின்று.. .வாழ்த்த சென்றவன் வாயடைத்து நின்றேன்''.- பார்த்திபன்

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (18:12 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மக்கள்  நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள்,  ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்   நடிகர் பார்த்திபன் கமலுக்கு வித்தியாக வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

''திரைப்படங்கள் ரிலீஸான தேதியுண்டு.ஒரு சினிமாவே ரிலீஸான தேதியின்று.
வாழ்த்த சென்றவன் வாயடைத்து நின்றேன்.
 
Thug life’  “இந்தப் படத்துல நீங்க use பண்ணியிருக்க tone நல்லாயிருக்கு” என்றேன்.
“Mani was very particular, வேற tone குடுங்கன்னு கேட்டாரு”- birthday baby “அவரு ஆயிரம் கேப்பாரு சார்.குடுக்க முடியுமா எல்லா நடிகராலயும்? உங்ககிட்ட இருக்கு-குடுக்க. அதனால கேட்டு வாங்கியிருக்காரு.” கேட்டு மெலிதாய் சிரித்தார்.இன்னும் சிரிக்க பேசினோம்.கடைசி மூச்சு வரை சினிமாவிலேயே இருக்கனும் என்கிற  உத்’வேகத்தை கூட்டுகிறது இவ்வித சந்திப்புகள்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்