தமிழக அளவில் கரூர் மாவட்டம் மீது தனிக்கவனம் செலுத்துமா ? போக்குவரத்து துறை ? பயணிகள் பாவம் !!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (19:46 IST)
தமிழக அளவில் மைய மாவட்டம் என்ற பெயர் மட்டுமில்லாமல், ஆன்மீகம் முதல் பண்டைய காலம் வரலாறு கொண்டது நமது கரூர், அப்படி பட்ட கரூர் தொன்று தொட்டே, பல்வேறு புராதன மிக்க பெயர்களை பெற்றதோடு, இந்திய அளவில் பேருந்துகள் கூடு கட்டும் நிறுவனங்களையும் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், கரூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ வும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்து வருகின்றார். கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்து வரும் நிலையில்., கரூரிலிருந்து திருச்சி செல்லும் பேருந்துகள் பகல் நேரங்களில் மட்டும் அனைத்து பேருந்து நிறுத்தங்களில் நின்று வருவதோடு, இரவு நேரங்களில் கரூரை விட்டால் திருச்சி மட்டும் ஏறுங்கள் என்று கூறி அரசு பேருந்து நடத்துநர்கள் பயணிகளை இறக்கி விட்டு சென்று வருகின்றனர். குறிப்பாக கோவையிலிருந்து கரூர் மார்க்கமாக திருச்சி வழியாக வேதாரண்யம், ஜெயங்கொண்டம், தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், நாகூர், திருவாரூர், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊருக்கு அரசு பேருந்துகள் செல்கின்றன. இந்நிலையில் கரூர் வழியாக திருச்சி செல்லும் போது புலியூர், மாயனூர், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், இலாலாபேட்டை, குளித்தலை, பெட்டவாய்த்தலை, ஜீயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் மேற்கண்ட ஊருக்கு செல்லும் பேருந்துகள் நிற்கின்றன. ஆனால் இரவு நேரங்களில் கரூரில் சுமார் 10 மணிக்கு மேல் ஆனவுடன் கரூர் டூ திருச்சி வழியாக உள்ள சுமார் 10 க்கும் மேற்பட்ட  ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் சரி, பேருந்துகள் நிற்காது என்று நடத்துநர்கள் தட்டி கழித்து வருகின்றனர்.

கரூர் பேருந்து நிலையத்தினை  விட்டால் சரி, திருச்சி மட்டும் தான் என்று மற்ற ஊர்களுக்கு அதாவது இடையே உள்ள ஊருக்குள் நிற்காது என்று பயணிகளை அவமரியாதை செய்யும் நடத்துநர்கள் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், கரூரை விட்டால் மணவாசி டோல்கேட்டினை ஒட்டிய இரண்டு பேக்கரிகளில் அனைத்து (அதாவது 100 சதவிகிதத்தில் 95 சதவிகித அரசு பேருந்துகள்) நின்று அந்த பேருந்துகளின் ஒட்டுநர் மற்றும் நடத்துநர்கள் டீ, பப்ஸ் உள்ளிட்ட ஸ்நாக்ஸ்களை உண்டபின்னர். அந்த பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளையும், எழுப்பி விட்டு கட்டாயமாக டீ, காபி மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிட வைக்கின்றனர். தமிழக அரசு உலக சாதனை என்று தமிழகத்தின் ஆளுநரே சட்டசபையில் கூறிய நேரத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே உள்ள பல ஊர்களில் இரவு நேரங்களில் பேருந்துகள் நிற்காது என்று வெளிப்படையாக பேசி வரும் நட்த்துநர்கள் மீது நடவடிக்கை பாயுமா ? ஒவ்வொரு பயணிகள் என்பதனை விட வரும் சட்ட சபை தேர்தலில் ஒவ்வொரு வாக்குகள் என்பதனை உணர்ந்து செயல்பட்டார் என்றால் கரூர் மாவட்டத்தினை அதிமுக கோட்டையாக மாற்றுவார் என்கின்றனர் நடுநிலையாளர்கள். இல்லையென்றால் அதிமுக கோட்டையில் ஓட்டை விழும் என்கின்றனர் பொதுமக்கள்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்