பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவிக்கும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம்!

வெள்ளி, 1 அக்டோபர் 2021 (09:35 IST)
ஜேம்ஸ் பாண்ட் வரிசை படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்து வருபவை. அந்த வகையில் 2 5 ஆவது ஜேம்ஸ் பாண்ட் படம் நேற்று வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் மிக அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ஜேம்ஸ்பாண்ட் நடித்த ’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் என்பது தெரிந்ததே. இந்த திரைப்படம் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஐந்து மாதங்களுக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .

’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று இந்த படத்தின் குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். 250 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தின் வியாபாரம் சுமாராக 600 மில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள 50 நாடுகளில் வெளியானது. இன்னும் பிரான்ஸ் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் வெளியாகவில்லை. இந்நிலையில் படம் இதுவரை பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது. கடைசி இரண்டு படங்களில் ஆக்‌ஷன் காட்சிகள் குறைவாக இருப்பதாக ரசிகர்கள் குறைபட்ட நிலையில் இந்த படத்தில் அந்த குறையைப் போக்கியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்