தர்பார் ரஜினியின் பெயர்: நிவேதா தாமஸ் போட்ட ட்விட்டால் பதறிப்போன படக்குழு!

Webdunia
சனி, 19 அக்டோபர் 2019 (11:41 IST)
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  மேலும் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிவேதா தாமஸ் மற்றும் ரஜினியின் ஷூட்டிங் வீடியோக்கள் வெளியானது. மேலும்,  அடிக்கடி படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்களும் , வீடியோக்களும் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்து வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது மீண்டும் படக்குழுவினருக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் நடிகை நிவேதா தாமஸ் ட்விட் ஒன்றை போட்டுள்ளார். அதில் , “இப்போது இந்த உலகம் அறியட்டும்! ஒரே ஒரு ஆதித்யா அருணாச்சலம் மட்டுமே உள்ளார். அவர் தான், என் அப்பா. தர்பாரை பாருங்கள்” என்று கூறி தர்பாரில் ரஜினியின் பெயர் ":ஆதித்யா அருணாச்சலம்" எனபதை லீக் அவுட் செய்துள்ளார். இதை கண்ட ரஜினியின் ரசிகர்கள் குஷியானாலும் இந்த தகவல் படக்குழுவினருக்கு தெரியுமா? உங்களை வெளுக்க போறாங்க...என கிண்டலாக கமெண்ட்ஸ் செய்து  வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்