கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த மற்றொரு இளம் நடிகை!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (15:37 IST)
தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார். 

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படம் சம்மந்தமாக புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் நடிப்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது நிவேதிதா சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சில்லு கருப்பட்டி மற்றும் சுழல் வெப் தொடர் ஆகியவற்றில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்