தடுப்பூசி போட்டு கொண்டால் 10% கட்டணத்தில் சலுகை: முன்னணி விமான நிறுவனம் அறிவிப்பு!

வியாழன், 24 ஜூன் 2021 (08:01 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்வதற்கு ஒரு சில சலுகைகளும் சில இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு விமான பயணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் தடுப்பூசி திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு சிறப்பு கட்டணம் அளிக்கப்படுகிறது. 
 
அதன்படி தடுப்பூசி முதல் டோஸ் அல்லது இரண்டு ரோஸ் போட்டு கொண்டவர்களுக்கு விமான கட்டணத்தில் 10 சதவீத சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த சலுகை நேற்று முதல் வழங்கப்பட்டு வருவதாகவும் கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்கும் வரை இந்த சலுகை நீடிக்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்