பேமிலி மேன் 2 சர்ச்சை… அமேசான் அலுவலகம் முன்பு ஈழத்தமிழ் மக்கள் போராட்டம்!

வியாழன், 24 ஜூன் 2021 (08:13 IST)
பேமிலி மேன் 2 தொடரில் ஈழத் தமிழர்களையும் அவர்களின் போராட்ட இயக்கங்களையும் தவறாக சித்தரித்துள்ளதாக எழுந்த சர்ச்சை தமிழகத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டது.

சமீபத்தில் வெளியான பேமிலி மேன் 2 மிக சுமாராகவே இருந்தாலும் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்ததனர்.

சமீபத்தில் வெளியான பேமிலி மேன் 2 மிக சுமாராகவே இருந்தாலும் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மற்றும் ஈழத் தமிழர் விடுதலை ஆதரவாளர்களும் அந்த தொடருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இப்போது அமேசான் தலைமையகத்தில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள் இந்த தொடரை திரும்ப பெறவேண்டும் என முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்