நித்யா மேனன் மட்டுமே நடித்த படம்

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (14:12 IST)
சப்போர்ட்டிங் கேரக்டர்கள் கூட இல்லாமல், நித்யா மேனன் மட்டுமே நடித்த படம் ஒன்று தயாராகி வருகிறது.
நாள்தோறும் சினிமாவில் புதுப்புது முயற்சிகள் கையாளப்பட்டு வருகின்றன. அவற்றில் சில வெற்றியும் பெறுகின்றன; சில தோல்வியும் அடைகின்றன. அந்த வரிசையில், ஒருவர் மட்டுமே நடித்துள்ள படமொன்று தயாராகி வருகிறது. அந்தப் படத்தில் நடித்திருப்பவர், பிரபல நடிகை நித்யா மேனன்.
 
‘பிரன்னா’ என்ற இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் வி.கே.பிரகாஷ். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் இன்ஜினீயராகப் பணியாற்றுகிறார். பல மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்