மிஷ்கின் அடுத்த படத்தில் 'மெர்சல்' நாயகி

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (21:06 IST)
விஷால் நடித்த 'துப்பறிவாளன்' படத்தை அடுத்து மிஷ்கின் அடுத்த படத்திற்கு தற்போது தயாராகிவிட்டார். அவருடைய அடுத்த படத்தின் ஹீரோ சாந்தனு பாக்யராஜ் என்ற தகவல் சற்றுமுன் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் வெளிவந்துள்ளது

மிஷ்கினின் அடுத்த படத்தில் 'மெர்சல்' நாயகிகளில் ஒருவரான நித்யாமேனன் நாயகியாக நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் சாய்பல்லவியும் நடிக்கவுள்ளார். நித்யாமேனன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்த படத்தை லிப்ரான் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்குவந்த பின்னர் ஆரம்பமாகும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்