நிக்கி கல்ராணியுடன் காதலில் விழுந்த ஹீரோ – கோலிவுட்டின் அடுத்த காதல் ஜோடி இவர்கள்தான்!

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (18:01 IST)
நடிகை நிக்கி கல்ராணியும் நடிகர் ஆதியும் காதலித்து வருவதாகவும் விரைவில் இரு குடும்பத்தின் சம்மதத்தோடும் திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் ஆதியும் நிக்கி கல்ராணியும் மலுபு என்ற தெலுங்கு படத்தில் முதன் முதலாக சேர்ந்து நடித்தனர். அதன் பின் மரகத நாணயம் என்ற தமிழ் படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படங்களின் போது இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவானது. அதையடுத்து இருவரும் இப்போது காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.

விரைவில் இருவரும் இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள போவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்