''செல்ஃபி'' பட இயக்குநருக்கு அடுத்த பட வாய்ப்பு கொத்த தயாரிப்பாளர் !

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (17:35 IST)
தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடித்து மதிமாறன் இயக்கி வெளியான படம் செல்பி. இந்த படத்தில் கௌதம் மேனன், வர்ஷா பொலம்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் இந்த மாதம் ஏப்ரல் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தை வெற்றிமாறனின் உதவியாளர்  மதிமாறன் இயக்கியிருந்தார்.  ஜிவி பிரகாஷ் இசையமைத்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது.இதில், கலைப்புலி எஸ்.தாணு கூறியதாவது: இயக்கு நர் மதிமாறன் இப்படத்தின் டைட்டில் செல்ஃபி என கூறு என்னிடம் ஒப்புதல் கேட்டார். அதற்குச் சரி என்றாஎன். இப்படத்தை நான் எடுக்க நினைத்தேன் ஆனால் தம்பிகள் கேட்டதும் சரி என்றேன். இப்படம் 38 நாட்களில் சிறப்பாக எடுத்ததற்காக மதிமாறனுக்கு நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தொழில் பக்கதி இருந்தது. மேலும்,வி கிரியேசன்ஸ் சார்பில் மதிமாறன் ஒரு படம் பண்ண வேண்டும். இதற்காக ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறேன் எனத் தெரிவித்தார்.

எனவே இயக்குநர் மதிமாறனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்