ஜெயிலர் 2வுக்குப் பிறகு பேன் இந்தியா ஹீரோவை இயக்கும் நெல்சன்… சம்பளம் இத்தனைக் கோடியா?

vinoth

வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (12:01 IST)
தமிழ் சினிமாவில் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் இயக்குனர் நெல்சன். ஆனால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுத்தார்.

அந்த படம் வெற்றியடைய அடுத்து சிவகார்த்தியோடு ‘டாக்டர்’ மற்றும் விஜய்யோடு ‘பீஸ்ட்’ மற்றும் ரஜினியோடு ‘ஜெயிலர்’ என அவர் கிராஃப் எகிறிக்கொண்டே செல்கிறது. ஜெயிலர் திரைப்படம் பெற்ற இமாலய வெற்றியால் அதன் இரண்டாம் பாகமும் உருவாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் ஜெயிலர் 2 படத்துக்குப் பிறகு நெல்சன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்காக ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. அந்த படத்துக்காக முன் பணமாக 50 கோடி ரூபாயும், லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதப் பங்கும் அளிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்