நெல்லை சீமை கிராமத்து தென்றலாக வந்திருக்கு நெடுநல்வாடை டிரெய்லர்!

புதன், 6 மார்ச் 2019 (19:05 IST)
நெல்லை சீமை கிராமத்து தென்றலாக உருவாகியுள்ள நெடுநல்வாடை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. செல்வகண்ணண் இயக்கிய இப்படத்தின் டிரெய்லரை கௌதம் வாசுதேவ் மேனன் 
வெளியிட்டு உள்ளார்.பி ஸ்டார் புரொடக்ஷன் தயாரித்துள்ளது. 
 
பூ ராமு, மைமி கோபி, இளங்கோ, அஞ்சலி நாயர், அஞ்சய் நடராஜ், செந்திகுமாரி உள்பட பலர் நடித்துள்ளனர். நெல்லை சீமை கிராமத்து தாத்தா மற்றும் அவருடைய பேரன், பேத்தி இடையே நடக்கும் பாச போராட்டமே படத்தின் பிரதான கதை. இந்த படத்தின் கதையை கேட்டு ஆர்வமான வைரமுத்து படத்தின் முழு பாடல்களையும் எழுதியுள்ளார்.
 
ஜோஸ் பிராங்ளின் இசையமைத்துள்ளார். வினோத் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.  தற்போது நெடுநல்வாடை டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வரும் 15ம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. 
 
வீடியோ லிங்க்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்